
அயராதுழைத்து அல்லும் பகலும் அரும்பாடு பட்டு
அழகிய செல்வங்களின் ஆணிவேராய் அருமையாய்
காட்சியளிக்கும் அப்பா..!
வாழ்க்கையின் பாடங்களை வாய்வார்த்தையுடன் நிறுத்திக் கொள்ளாமல்
நடைமுறையில் நயமாய் கற்றுக்கொடுக்கும் அப்பா.!
கற்றுக்கொடுத்த அனைத்தையும் முறையாய் கடைப்பிடிக்க
தூண்டும் கல்வியாசிரியர் அப்பா.!
கல்வியாசிரியர் என்றாலே கண்டிப்பு இருக்குமல்லவா!
அக்கண்டிப்பை பல சமயங்களில் அதட்டலாலும் சில சமயம்
அருமையாகவும் வெளிப்படுத்தும் அப்பா.!
வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்
மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!
மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்
கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!
அக்கதாநாயகனாய் தோன்றும் அப்பா அவ்வப்போது
கடோத்கஜனாய் காட்சியளிப்பதுமுண்டு பிள்ளைகளின் பார்வையில்..!!
பிள்ளைகளின் பாசத்தை சில நேரங்களில்
நேரடியாய் உணர்ந்திராத அப்பா.!
நேரங்கிடைத்த பொழுதெல்லாம் பிள்ளையின்
பெருமையை மற்றவர்களிடம் பறைசாற்றும் அப்பா.!
அப்பாவின் அரும்பெருமைகளை தன்னுள்ளே
அடக்கியிருக்கும் பிள்ளையை கண்டுப்பிடிக்கமுடியாத அப்பா.!
பிள்ளையை கண்டுப்பிடிக்க முடியாத அப்பாவை தினமும்
தன் வாழ்வில் கதாநாயகனாய் காணும் பிள்ளை
" அப்பாவே தன் வாழ்வில் முதல் கதாநாயகனாய்.."!!
3 comments:
அப்பப்பா supper
ராஜா,
அருமை அருமை
அப்பாவின் அரும்பெருமைகளை தன்னுள்ளே
அடக்கியிருக்கும் பிள்ளையை கண்டுப்பிடிக்கமுடியாத அப்பா.!
பிள்ளையை கண்டுப்பிடிக்க முடியாத அப்பாவை தினமும்
தன் வாழ்வில் கதாநாயகனாய் காணும் பிள்ளை
" அப்பாவே தன் வாழ்வில் முதல் கதாநாயகனாய்.."!!
நல்வாழ்த்துகள் ராஜா
Excellent.You brought out so many wonderful memories.Thank you.
Ravi
Post a Comment