குழந்தை..


இறுதியாக முதன்முதலாய் பிறந்த குழந்தை
பார்த்தபோது பரவசமடைந்த பெற்றோர்

பிறந்தவுடன் இரத்தசகதியுடன்
வாழ்க்கையின் முதலாய் குழந்தையை
கண்டு மயங்கிய தந்தை

வாழ்க்கையின் முழுமையை முழுதாய்
அடைந்த ஆனந்தகண்ணீர் விட்ட தாய்..

வாழ்க்கை மேலும் விரிவடைந்ததை கண்ட பெற்றோர்...

சின்னஞ்சிறு குழந்தையவளின் சிறு பிஞ்சிவிரல்களும்
அழகிய தேன்சிந்தும் தேகமும் இவ்வுலகில் எவ்விலை
கொடுத்தாலும் கிடைக்காதெனவுணர்ந்த பெற்றோர்..

தங்களின் சகலவிதமான நடவடிக்கைகளையும்
நொடிப்பொழுதில் திருப்பிப்போட்ட குழந்தை

தன் அழுகையின் மொழியால் தன் தேவையை
பூர்த்தி செய்ய தன் பெற்றோருக்கு தெரிய தந்த குழந்தை..

மொத்தத்தில் நாள் பொழுதில் சின்னஞ்சிறு
குழந்தையவள் அனைவரையும் தன்னாளுமையின்
கீழ் வைத்த ஆளுநரானாள்...

பெற்றோரோ பல இரவுகளை நித்திரையின்றி
கண் விழித்து கழித்தபோதிலும்சிறுக்குழந்தையவளின் சில்லென்ற
சிரிப்பதனை கண்டவுடன் அயராயிரவுகளனைத்தும்
ஆனந்த இரவாயுணர்ந்த பெற்றோர்

குழந்தையவளின் அசைவனைத்தையும்
அங்கங்குலமாக ரசித்த பெற்றோர்

ஐந்திங்கள் கழிந்த குழந்தையின்
விரலினிக்கிடையில் கமழும் எச்சிலின்
மணத்தை எத்தனை வாசனைத்திரவியங்களிலும்
இதுவரையுணர்ந்திராத பெற்றோர்

சிறு குழந்தையவளின் சங்கேத பாஷையான
".. Gகா.. Gகா.. Gகூ... Gகூ.." வுக்கு நிகரான
எந்த மெல்லிசைகளையும்
இதுவரை கேட்டிராத பெற்றோர்

மொத்தத்தில் வாழ்க்கையின் முழுமையாய்
முழுதாய் உணர்ந்த பெற்றோர்
அதை அள்ளி வழங்கிய குழந்தை

No comments: