அன்புடன் மலராய்...
அன்புடன் பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " அன்பு மலர்கள் " எனவா.?
அன்புடனிடமே கேட்கிறேன்.!!
இவ்வாண்டு துவக்கத்தில் என்னிதய மொழியை
மீண்டும் எழுதக்கற்று கொடுத்து
இதயம் நுழைந்து பல நல்லிதயங்களை
எனக்குத்தொடுத்து கொடுத்த வாசமுள்ள பூமாலை நீ..!!!
அன்புடனின் மிகுதியின் இறுதிவரை
உன் மலர்க்கொத்தில் நானும் ஒரு கவிமாலையாய்
வாசம் வீசி உன் அன்புடன் வருவேன் நான்.!!
இணையத்தில் இதயமொழி தேடியபோது என் மின்னஞ்சலில்
எனக்கு நம் இதயமொழியை முதன் முதலாய் காட்டிய என்
அண்ணன் அசன் புகாரி அன்புடனின் ஆசானாய் மாறி
அன்புடனில் எழுத ஆசிர்வதித்த பெரியவர் சீனா ஐயா
எனக்கு எழுதுவதற்கு உந்து சக்தி கொடுத்த கவிஞர் சக்திதாசன்
கவிஞனே வா நீ வந்து எழுது என்னோடு சேர்ந்து என வாஞ்சையோடு
மல்லிகைப்பூ தூவி வரவேற்ற வாணி அக்கா
அழகான அன்புடனின் செய்தி மற்றும் தகவல் தொகுப்பாளர்
வா நண்பா என்னோடு சேர்ந்து கவிதை ரீங்காரம் இடு
என்றழைத்த இளம் இலங்கை கவி ரிஷான்
அடடா என்னே அருமை என அனைவரையும் அன்போடு அரவணைக்கும்
அராதா கவி அன்புடனில் பாசத்தை மும்மாறி பொழியும் பாசக்கார நண்பா
இப்படியாய் ஓராயிரம் கவிஞர் பெருமக்களை எனக்கு அறிமுகப்படுத்திய
அண்ணன் அன்புடனின் ஆசான் அசன் புகாரிக்கா? அல்லது
அவரை எனக்கு அறிமுகப்படுத்திய இறைவனுக்கா?
யாருக்குச் சொல்ல? என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
இருந்தும் ஆயிரம் கவிபெருமக்களுக்கும் ஓராயிரம் நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்புடன் பற்றிய உங்களின் முதல் தமிழ் கவிதைக்கு " அன்பு மலர்கள் " என பெயரிட்ட தங்களின் பண்பு மனத்தை நான் என்னவென்று சொல்ல...வார்த்தையின்றி தவிக்கிறேன்.
அராதா.
Post a Comment