அப்பா..


அயராதுழைத்து அல்லும் பகலும் அரும்பாடு பட்டு
அழகிய செல்வங்களின் ஆணிவேராய் அருமையாய்
காட்சியளிக்கும் அப்பா..!

வாழ்க்கையின் பாடங்களை வாய்வார்த்தையுடன் நிறுத்திக் கொள்ளாமல்
நடைமுறையில் நயமாய் கற்றுக்கொடுக்கும் அப்பா.!
கற்றுக்கொடுத்த அனைத்தையும் முறையாய் கடைப்பிடிக்க
தூண்டும் கல்வியாசிரியர் அப்பா.!

கல்வியாசிரியர் என்றாலே கண்டிப்பு இருக்குமல்லவா!
அக்கண்டிப்பை பல சமயங்களில் அதட்டலாலும் சில சமயம்
அருமையாகவும் வெளிப்படுத்தும் அப்பா.!

வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்
மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!

மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்
கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!

அக்கதாநாயகனாய் தோன்றும் அப்பா அவ்வப்போது
கடோத்கஜனாய் காட்சியளிப்பதுமுண்டு பிள்ளைகளின் பார்வையில்..!!

பிள்ளைகளின் பாசத்தை சில நேரங்களில்
நேரடியாய் உணர்ந்திராத அப்பா.!

நேரங்கிடைத்த பொழுதெல்லாம் பிள்ளையின்
பெருமையை மற்றவர்களிடம் பறைசாற்றும் அப்பா.!

அப்பாவின் அரும்பெருமைகளை தன்னுள்ளே
அடக்கியிருக்கும் பிள்ளையை கண்டுப்பிடிக்கமுடியாத அப்பா.!

பிள்ளையை கண்டுப்பிடிக்க முடியாத அப்பாவை தினமும்
தன் வாழ்வில் கதாநாயகனாய் காணும் பிள்ளை

" அப்பாவே தன் வாழ்வில் முதல் கதாநாயகனாய்.."!!

இருமணம்...


இறையானை என்றதுவை முறையாக செய்து வந்து
அண்ணலாரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி
இஸ்லாத்தின் விழுதுகளாய் எங்கள் நண்பன் (...........)ம்

பெண்குலத்தின் புதுப்பொலிவாய் (........)ம்
மெய்யினிலே ஆவியென மேதினியில்
கலந்திருந்து உங்கள் கரங்களிலே
கல்பு வைத்து கசடற்று வாழ்ந்திடுவீர்..!!

உலகின் போராட்டத்தை உன் உவகையிலே
கழித்திடவே..! உளமார ஏத்திட்டாய் (நண்பனே..ம்)

வாணலோகத்து பெண்களெல்லாம் தேனெடுத்து உன்னுகையில்
வடிந்து வடிந்த தேன் துளிகள் (.....) வடித்த சொல்லொன்றோ.!!
சொர்க்கத்து பூமரங்களில் உதிர்ந்த பூ.. (......) நீ ஆனாயோ..!!

அன்பு மணமக்களே..!!
உங்கள் உள்ளங்கள் நண்பர்களுக்கோ ரோஜாவாகட்டும்.!
வம்பர்களுக்கோ முள்ளாகட்டும்.! அன்பின் இல்லமாகட்டும்.!
இன்பத்தேன் கூடாகட்டும்.! இல்லறம் சொர்க்கமாகட்டும்.!

கிள்ளைமொழிப் பேசுகின்ற பிள்ளைகளை பெற்றெடுத்து
பதினாறு கலைகளையும் பரிசாக நீங்கள் பெற்று பல்லாண்டு காலம்
இப்பாரினிலே புகழெய்து வாழ்ந்திடவே என்றும் உளமார வாழ்ந்திடவே
என்றென்றும் உளமார வாழ்த்தி வல்ல இறைவனை நித்தம் வேண்டும்
மணமக்களின் நட்பு மறவாத நண்பன்..

வேண்டுதல்... (காதலினால்..)


நம் சமூக கலாச்சார மூட
நம்பிக்கையால் நீயும் நானும்
காதலின்போது காதலை தவறவிட்டோம்
நாம்தான் காதலின் வாழ்வில் ஒன்றாக
நினைத்த காதல் துணைகளாய்
அமையவில்லை நமக்கு அமையும்
துணைகளாவது நம் காதல்போல்
அமைய வேண்டுகிறேன்..

ஆண்டு தோறும்...


வெள்ளைப்பனியிலொரு
மழலையின் கால்தடம் திரும்பி
பார்க்கும் முன்னே கரைந்து
கரைபுரண்டோடியது..
பால்போலே கிடந்த பனிமணல்கள்
கரையாதா என ஏங்கும் வெள்ளை உள்ளங்கள்
மத்தியில் வெள்ளை நிற பறவைகள் காணாமற்போயின.!!
கனடா குளிரில்..
பட்ட மரங்கள் பாய் மரங்களாகியது
சந்திரனோ தினந்தோறும் தலைதூக்கினான்

கொஞ்சநஞ்ச பனிமணல்களும் கரைந்தோடவும்
வெள்ளை பறவைகள் எங்களை நாற்புறமும்

சூழ்ந்த ஏரிகளை நோக்கி பறந்த வரும் அழகையும்
ஏரிகளில் ஓடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் அலைகளோடு

அலையும் காட்சிகளை காண்பதிலும் என்னே ஓர் ஆனந்தம்
இப்படியாய் கனடிய வாழ்வில் ஆண்டுதோறும் வெள்ளை நிறம்
நீங்கா இடம் பெற்றுவிட்டது..

தமிழ் புத்தாண்டு....


கடந்துபோன மாதங்களையும் நாட்களையும் நாம் எண்ணி
அடையபெற்ற இன்பத் துன்பங்களை நினைத்து
பார்க்க கூட நேரமில்லா இவ்வுலக இயந்திர
வாழ்க்கையில் இனிதே நிறைவுற்ற பன்னிரண்டு
தமிழ் மாதங்கள் கழித்து தமிழர் தம் ஒவ்வொருவரின்
மனதிலும் சந்தோஷம் பெருகவும் சிரித்துக்கொண்டே வாழவும்
சித்திரை திருநாளாம் இன்று தமிழர் தம் பெருநாள் முதல்
வளமான அமைதியான வாழ்வு இவ்வுலகில் அமைய
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டியவனாய்

அன்புடனுக்கும் அன்புடன் குடும்பத்தின் உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

வீடுகள்..




அழகின் உருவாய்
அருகருகே ஆயிரமாயிரம்
குடில்கள் ஆளரவரமின்றி
அன்புடனுக்காய் ஏங்கி....!!

இதயம் (காதலினால்..)


இதயம் உள்ளோரே
நன்காராய்ந்து பார்ப்பீரோ..!!
நீங்கள் செய்வது சரியாயென்று..
காதல் புரிவது குற்றம் என்போரே..
உங்கள் இதயத்திடம் நீங்களே கேட்டு
பாருங்கள்... நீங்கள் காதலிக்கவில்லையா..?
என்று.. இதற்கு உங்களால் விடை கூறமுடிந்தால்
காதலின் காதலர்களாலும் விடை கூறமுடியும்
நல்லிதயங்களே..

குடும்பதினத்தில்


குடும்பதினத்தில் ஒரு குடும்ப கதை


ஒண்டாரியோ மாகாணத்தில்
ஒற்றை திங்களில் ஒன்றாக இருந்த
ஒன்று குடுத்தனத்தில் ஒவ்வொரும்
ஒற்றையடி பாதையில் தனித்தனியே
பிப்ரவரி மாதத்தில் பிரிந்து சென்றனர்...

Monday, February 18th 2008

குழந்தை..


இறுதியாக முதன்முதலாய் பிறந்த குழந்தை
பார்த்தபோது பரவசமடைந்த பெற்றோர்

பிறந்தவுடன் இரத்தசகதியுடன்
வாழ்க்கையின் முதலாய் குழந்தையை
கண்டு மயங்கிய தந்தை

வாழ்க்கையின் முழுமையை முழுதாய்
அடைந்த ஆனந்தகண்ணீர் விட்ட தாய்..

வாழ்க்கை மேலும் விரிவடைந்ததை கண்ட பெற்றோர்...

சின்னஞ்சிறு குழந்தையவளின் சிறு பிஞ்சிவிரல்களும்
அழகிய தேன்சிந்தும் தேகமும் இவ்வுலகில் எவ்விலை
கொடுத்தாலும் கிடைக்காதெனவுணர்ந்த பெற்றோர்..

தங்களின் சகலவிதமான நடவடிக்கைகளையும்
நொடிப்பொழுதில் திருப்பிப்போட்ட குழந்தை

தன் அழுகையின் மொழியால் தன் தேவையை
பூர்த்தி செய்ய தன் பெற்றோருக்கு தெரிய தந்த குழந்தை..

மொத்தத்தில் நாள் பொழுதில் சின்னஞ்சிறு
குழந்தையவள் அனைவரையும் தன்னாளுமையின்
கீழ் வைத்த ஆளுநரானாள்...

பெற்றோரோ பல இரவுகளை நித்திரையின்றி
கண் விழித்து கழித்தபோதிலும்சிறுக்குழந்தையவளின் சில்லென்ற
சிரிப்பதனை கண்டவுடன் அயராயிரவுகளனைத்தும்
ஆனந்த இரவாயுணர்ந்த பெற்றோர்

குழந்தையவளின் அசைவனைத்தையும்
அங்கங்குலமாக ரசித்த பெற்றோர்

ஐந்திங்கள் கழிந்த குழந்தையின்
விரலினிக்கிடையில் கமழும் எச்சிலின்
மணத்தை எத்தனை வாசனைத்திரவியங்களிலும்
இதுவரையுணர்ந்திராத பெற்றோர்

சிறு குழந்தையவளின் சங்கேத பாஷையான
".. Gகா.. Gகா.. Gகூ... Gகூ.." வுக்கு நிகரான
எந்த மெல்லிசைகளையும்
இதுவரை கேட்டிராத பெற்றோர்

மொத்தத்தில் வாழ்க்கையின் முழுமையாய்
முழுதாய் உணர்ந்த பெற்றோர்
அதை அள்ளி வழங்கிய குழந்தை

அன்புடன் மலராய்...


அன்புடன் பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " அன்பு மலர்கள் " எனவா.?
அன்புடனிடமே கேட்கிறேன்.!!
இவ்வாண்டு துவக்கத்தில் என்னிதய மொழியை
மீண்டும் எழுதக்கற்று கொடுத்து
இதயம் நுழைந்து பல நல்லிதயங்களை
எனக்குத்தொடுத்து கொடுத்த வாசமுள்ள பூமாலை நீ..!!!
அன்புடனின் மிகுதியின் இறுதிவரை
உன் மலர்க்கொத்தில் நானும் ஒரு கவிமாலையாய்
வாசம் வீசி உன் அன்புடன் வருவேன் நான்.!!
இணையத்தில் இதயமொழி தேடியபோது என் மின்னஞ்சலில்
எனக்கு நம் இதயமொழியை முதன் முதலாய் காட்டிய என்
அண்ணன் அசன் புகாரி அன்புடனின் ஆசானாய் மாறி
அன்புடனில் எழுத ஆசிர்வதித்த பெரியவர் சீனா ஐயா
எனக்கு எழுதுவதற்கு உந்து சக்தி கொடுத்த கவிஞர் சக்திதாசன்
கவிஞனே வா நீ வந்து எழுது என்னோடு சேர்ந்து என வாஞ்சையோடு
மல்லிகைப்பூ தூவி வரவேற்ற வாணி அக்கா
அழகான அன்புடனின் செய்தி மற்றும் தகவல் தொகுப்பாளர்
வா நண்பா என்னோடு சேர்ந்து கவிதை ரீங்காரம் இடு
என்றழைத்த இளம் இலங்கை கவி ரிஷான்
அடடா என்னே அருமை என அனைவரையும் அன்போடு அரவணைக்கும்
அராதா கவி அன்புடனில் பாசத்தை மும்மாறி பொழியும் பாசக்கார நண்பா
இப்படியாய் ஓராயிரம் கவிஞர் பெருமக்களை எனக்கு அறிமுகப்படுத்திய
அண்ணன் அன்புடனின் ஆசான் அசன் புகாரிக்கா? அல்லது
அவரை எனக்கு அறிமுகப்படுத்திய இறைவனுக்கா?
யாருக்குச் சொல்ல? என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
இருந்தும் ஆயிரம் கவிபெருமக்களுக்கும் ஓராயிரம் நன்றிகள்

உயிர்ப்பூ..



உன்னைப்பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " உயிர்ப்பூ " எனவா.?
உன்னிடமே கேட்கிறேன்.!!
பாதியில் வந்து
விழியில் விழாது
இதயம் நுழைந்து என்னுயிரில்
கலந்த உணர்வு நீ..!!!
வாழ்க்கை மிகுதியின் இறுதிவரை
உன் உள்ளத்தில் உறவாட வருவேன் நான்.!!
இணையத்தில் இதயம் தேடியபோது என் மின்னஞ்சலில்
உதயமாகிய " உயிர்க்கவிதையே"
உன்னை உலகுக்கு அனுப்பிய கடவுளுக்கா? இல்லை உன்னை
என்னில் உதயமாக்கிய இணையத்திற்கா? யாருக்குச் சொல்ல?
என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
கண்மணிக்கு எட்டா தூரத்தில் பூத்திருக்கும் என்னுயிர்ப்பூவே
நெஞ்சில் பாசமலராய் உருமாறிய நீ.. என் உயிர் உள்ளவரை நீயே..