நட்போடு நாம் வாழுவோம்..

விண்ணோடும் மண்ணோடும்
நாம் வாழும் வாழ்வில்
இன்றோடு.. நட்பாக பத்தாண்டுக் காலம்.........
மகிழ்வோடு கொண்டாடுவோம்... என்றென்றும்

நட்போடு நாம் வாழுவோம்
(விண்ணோடும்..)

வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே
நம் நட்புக்கும் என்றென்றும் பிரிவில்லையே..

(வழிகின்ற..)

காற்றுக்கு திசையில்லை தேசமில்லை
நட்பென்றும் உறவாகட்டும்..

(விண்ணோடும்)

நம் நட்பெல்லாம் உறவாகி ஊராகட்டும்
நம் தேசத்தில்.. நட்பென்னும் பூ பூக்கட்டும்..

என் அன்புமூத்த மகளே..

என் அன்புமூத்த மகளே..
எங்களின் முதல் தங்கமே
இன்று உன் பிறந்தநாள், இந்த நாளை
மட்டும்தான் நான் நம் வீட்டுக்காலண்டரில்
குறித்து வைக்காத திருநாள்॥ காரணம்

என் வாழ்வின் முதன் முறையாய் என்னுயிரை, உயிரின்
முதற்துடிப்பை தொட்டிலில் கண்முன்னே கண்ட நாள்..
நீ பிறந்த நாளன்று முதல்
வேலையாய் என்னில் அனைத்தும்
ஆராவரிக்கத்தொடங்கிய நாள்..!!

அந்த ஒரு நாளுக்காக பத்துமாதங்கூட
காத்திருக்க முடியாமல் தினந்தோறும் உன்
வருகைக்கான நாளை எண்ணிக் காத்திருந்து மகிழ்ந்தோம்..!!

நீ பிறந்தநாளன்று நீ பிறந்த மருத்துவமனையில்
நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி வந்துவிட்டதாக
ம்ருத்துவர் கூற மனமகிழ்ந்தோம்..
அழகாய் சிரிப்புடன் பிறந்த குழந்தைகளில் நீயும்
ஒரு குழந்தையென மருத்துவர்
கூற புலங்காகிதமடைந்தோம்..!!

நீ பிறக்கும்போது 3 கிலோ இருந்தாய்
பத்துமாதம் உன் அம்மாவால்
3 கிலோ அழகுதான்
சேர்க்க முடிந்ததோ என
எண்ணி என்னுள் ஆச்சர்யம்..!!!

மழைக்காலம், கார்காலம், குளிர்க்காலம்
என எந்த காலமானாலும் சரி
நீ பிறந்த காலம்தான் எங்களுக்கு
அழகான நல்லகாலம்..!!

உன் பிறந்த நாள் எப்போ? எப்போ? என
நீ மூன்று மாதமாய் கேட்டுக்கொண்டிருந்தாயே
எங்களின் கண்மனியே.. இதோ இன்றுதான்
உன் ஐந்தாவது பிறந்தநாள்... ஆனால் எங்களுக்கோ
என்றுமே நீ பிறந்தநாள்தான்..!!
என நான் சொல்லி உனக்குப்புரிய
இன்னும் சில பிறந்தநாட்களாகும்..

ஒருமுறைதான் நீ பிறந்தாய் ஆனால்
உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு
நொடிப்பொழுதும் நான்
பிறந்துக்கொண்டிருக்கிறேன்..

உன் பிறப்பு உன்
தாய்க்கு தாய்மையையும்
எனக்கு வாழ்வையும் தந்தது..

நீ பிறந்தாய் எனக்கு இரண்டாவதாய்
ஒரு முழுநிலவு தென்பட்டது..

வருடத்திற்கு 12 விடுமுறை நாட்கள்
வந்தாலும் உன் பிறந்தநாள்தான்
எனக்கான அரசு விடுமுறைநாள்..

என் மனைவிக்கு நீ பிறந்தாய்
என் தாய்க்க்குப்பின் நீயே என் தாய்..
என் அன்புமூத்த மகளே..