அம்மா என்றழைக்காத உயிர்களில்லை
இவ்வுலகில், எனக்கான அனைத்தையும் அலுக்காமல்
செய்வாயே அம்மா
இவ்வுலகில் தன்னைவிட என்னில் உயிராக இருந்தாயே
அம்மா, - சில பொழுதுகளில் காயம்படும்பொழுதெல்லாம்
மெளனத்தையே உனக்குச்சொந்தமாக்கி கொள்கிறாயே
எப்படியம்மா கடலைவிட பெரிய பொறுமையை உன்னுள்
வளர்த்துக்கொண்டாய்..
நான் கீழ்விழுந்தபொழுதெல்லாம் தோழமையுடன்
தோள் கொடுத்து நிற்பாயே அம்மா
அழைக்கும் குரலுக்கெல்லாம் சளைக்காமல்
செவிசாய்க்கும் அம்மா
இவ்வுலகில் எப்பெரிய எழுத்தாளனும் என்றுமே எழுத்தில்
விளக்கமுடியாததை விட அதிகமம்மா உன் அன்பு
மரியாதை என்ற மாபெரும் பண்பை உன்னிலிருந்து முழுமையாய்
எனக்கு கற்றுக்கொடுத்த அம்மா
அம்மா நீயே என் ஆரம்பகால ஆசிரியையாய்
அறிவுரை களஞ்சியமாய் இன்னும் எண்ணிலடங்கா
வர்ணிக்கமுடியாத பல பாத்திரங்கள் படைத்த அம்மா..
உன்னிட்த்தில் ஒன்றைக் கேட்கவேண்டும் நான்.!!
அம்மா இவையனைத்தும் எப்படியம்மா உன்னால் மட்டுமே
முடிகிறது.??? எந்த சக்தியை நீ மட்டும் இவ்வுலகில் பெற்றிருக்கிறாய் அம்மா.??!!
இந்த கேள்விக்கும் உனக்கேயுரிய மெளனத்தாலாட்டையே பதிலாய் தந்த அம்மா
இவ்வுலகில் எவ்வுயிரினும் காணா ஒன்றைமட்டும் கண்டேன் உன்னிடம் அது.!!
" அம்மா என்றால் உயிரில் கலந்த அன்பு..."
2 comments:
உங்கள் 'அம்மா' கவிதை என்னை நெகிழவைத்துவிட்டது ராஜா! நான் செல்லும் திருமண நிகழ்ச்சிகளில் எந்த ஆர்ச்செஸ்ட்ரா குரூப் வந்தாலும், அவர்களை , 'மன்னன்' படத்தில் வரும் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலைப் பாடச்சொல்லி கேட்டு அப்படியே உருகிப்போய் உட்கார்ந்துவிடுவேன். அப்படியொரு ஈர்ப்பு அப்பாடலில் எனக்கு!
- கிரிஜா மணாளான், திருச்சி.
(எனக்கு அருகில் தஞ்சையிலுள்ள நீங்கள் என்னுடன் தொடர்புகொள்ளலாமே! நான் எனது எழுத்தாளர் நண்பர் 'தஞ்சை தாமு' வுடன் இணைந்து நடத்தும் 'தஞ்சை மகிழ்வோர் மன்றத்தில்' (நகைச்சுவை மன்றம்)பங்குகொள்ளலாமே?
send a mail to me, I will inform my Mobile Number.
" அம்மா என்றால் உயிரில் கலந்த அன்பு..." -ஆஹா......!
Post a Comment