ஆசிரியர்..

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
கணக்கிலடங்கா மணித்துளிகளை செலவிட்டு
சிலைகளல்லா இளம் எதிர்கால சிற்பிகளை செதுக்கி
அழகுப்பார்க்கும் ஆசிரியர்

ஆட்டங்கள்தான் அருமையென எண்ணி
அழகான சிந்தனைகளை வெளிக்கொணர தெரியா
மாணவனை அழகிய வடிவில் வண்ணமயமாக்கும் ஆசிரியர்

அன்பும் கட்டுப்பாடும் ஒரு சேர நிலைத்து
இளைய சமுதாயத்தை சுடர்விட்டு எரியும்
ஒளிவிளக்காய் ஓளிக்கச் செய்யும் ஆசிரியர்

மாணவன் எங்ஙணம் முயன்றும்
முடியாமல் போகும் நிலையில் அன்பான
அரவணைப்பிலும் அழகிய செயல்களாலும்
செதுக்கிக் காட்டும் ஆசிரியர்

கடினமான மலைகளும் மென்மையான நதிகளும்
ஒருமிக்க சங்கமித்து சோலைதனை உருவாக்கும் அழகைவிட
ஆசிரியர் சில சமயம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் மென்மையான
அழகுரைகளையும் தேவையென்ற அறிவுரைகளையும் தந்து நாட்டின்
எதிர்காலத் தூணை உருவாக்கும் அற்புதத்தை - உள்ளூர முழுமையாய்
அனுபவித்தால் மட்டுமே புரிய வைக்கும் ஆசிரியர்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வேதத்தில்
மூன்றாமிடம் பிடித்திருந்தாலும் அதிக நேரம் மாணவனிடம்
நேரத்தை செலவு செய்து முதலாமிடம் பிடித்து மாணவனின்
வாழ்வை செம்மைப் படுத்தி செதுக்கும் சிற்பியாய் ஆசிரியர்..

1 comment:

அகரம் அமுதா said...

பொதுவாக ஆசிரியர் மாணவனைச் செதுக்குவார். நீங்கள் ஆசிரியரைச் செதுக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். -அன்புடன் அகரம்.அமுதா