அழகான கோடைக்காலம்..

கோடையில் குதூகலாமாய் அழகிய சந்திரோதயத்தோடு
துவங்கும் புத்தம்புது காலைப்பொழுதில் அன்புடன் மகிழ்வாய்

துள்ளித்தெரியும் குழந்தைகள் அவர்களுக்கென்றே நிதமும்
குளிர்ச்சியாய் மெல்லிசையோடு வலம் வரும் " ஐஸ் வண்டி"

நீச்சல் குள மேற்கரையில் அமைதியாய்
உறங்கும் கோடை விரும்பிகள்

சூரியன் சுட்டெரித்தாலும் சட்டை செய்யாமல் அன்றாடம்
அனைவரையும் ஒருங்கினைத்து அவல்மெல்லும் நம் தமிழினம்

அரை கிலோமீட்டராவது நடந்தே ஆகவேண்டும்
என தள்ளாடி நடக்கும் வயோதிகர்கள்..

பள்ளிக்கூடம் வாராந்திர விடுமுறையின் போதே திருவிழா நாளாக
இன்புறும் மாணவசெல்வங்களுக்கு முழுமையாய்

இரு மாதங்கள் விடுமுறை சொர்க்கமாய் காட்சியளிக்கிறது
அச்சொர்க்கத்தின் தொடர் திருவிழாவுக்கு அவன் போடும் திட்டங்கள் பல
" பள்ளியும் இல்லை - காலையில் சீக்கிரம் எழு " என்ற சத்தமும் இல்லை
இரவில் படி படி என்ற அதட்டலும் இல்லை" நிம்மதியாய் உறங்கலாம்
வேண்டிய நேரத்திற்கு வேண்டியதை செய்யலாம் " என திட்டங்கள் பல் தீட்டும் மாணவன்..!!

அவரவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை வாரந்தோறும்
விளையாடும் வாலிபர்கள்..

அடர்த்தியாய் அதனினும் அதிகமாய் பூத்துக்குலுங்கும்
செர்ரி பழங்கள் அதனை சுவைப்பதற்காகவே ஆயிரமாயிரம்
குடும்பங்கள் செர்ரி பழங்கள் நிறைந்த கிராமங்களை நோக்கி செல்லும் உல்லாச பயணங்கள்.!

" கேம்பிங்க் என்றும்.! காட்டேஜ் லைஃப் என்றும்.!
நகரவாசிகள் தன்னை கிராமங்களிலும் காடுகளிலும் அமைதியாய்
ஐக்கியப்படுத்தி "B.B.Q" என்ற முறையில் உணவுகளையே ஒரு வாரக்காலம்
குக்கிராமங்களுக்கு சென்று "குக்" பண்ணிக்கொண்டு வாழ்ந்தின்புற வருடம் முழுதும்
வகைவகையான திட்டங்கள் தீட்டும் நகரவாசிகள்".!

கோடையே நம் வாழ்க்கையின் முழுமையாகாதா என எண்ணும் பல
எண்ணங்களின் ஓசையை முழுமையாய் இரண்டு மாதங்களே அனுபவிக்கும்
ஒன்றாய் சேர்ந்து வரவேற்கும் " அழகான கோடைக்காலம்"

No comments: