அவளை
ஆசையாய்
இனிமையுடன்
ஈர்ந்து
உள்ளூர
ஊன்றுதலுடன்
என்றும்
ஏக்கத்துடன்
ஐம்புலன்களையும்
ஒன்றாக்கி
ஓர் பொழுதாவது
ஒன்றாக வாழ அக்கரையில்
இருப்பவளை இக்கரையில்
இருக்கும் நான் என்றென்றும்..
என் புகைப்படம்

என் புகைப்படமும் என்னவளின் எதிர்ப்பார்ப்பும்
என்னிரு தோள்களுண்டு
நீயென் மேல் மென்மையாக
சாய்ந்துக் கொள்ள
என்னிரு செவிகளுண்டு
உன் பேச்சை மட்டுமே கேட்டு கொண்டேயிருக்க
என்னிரு கருவிழிகளுண்டு
உன்னை தினமும் பார்த்துக்கொண்டேயிருக்க
என்னிரு நாசியுண்டு
உன் வருகையின் வாசத்தை தூரத்திலிருந்தே தினம் உணர
என்னிரு கண்ணங்களுண்டு
உன் மென்கரங்களை கொண்டு என்னை அறைவதற்கு
என்னிரு உதடுகளுண்டு
உன் பெயரை மட்டுமே உச்சரிக்க..
என்னிரு கால்களுண்டு
உன்னை மட்டுமே தேடி அலைவதெற்கென்று
என் புகைப்படத்தில் கண்ணுக்குப் புலப்படாத
இரண்டுண்டு அது உன்னைப் பற்றி மட்டுமே
சிந்தித்து கொண்டிருக்ககூடிய சிறிய மூளையும்
உனக்காகவே ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கும்
என் மென்மையான இதயமும்
இன்னும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்? என் புகைப்படத்தில்?!
உன்னவனாக இருக்க வேண்டிய தகுதியையா.??!!!!
தோழா..

உனக்குத் தமிழ் பிடிக்கும் எனக்கு உன்னைப் பிடிக்கும்
தோழா.. நீ என்னை வாயாடி என்று சொன்னாய்
ஆனால் இப்பொழுதோ நான் பேச்சுக்களை விட
மெளனத்தையே அதிகம் விரும்புகிறேன்!
ஏனென்றால் நான் பேசும்பொழுது என் குரல் கேட்கிறது
என் மெளனத்திலோ உன் குரலல்லவா கேட்கிறது!!
என் பெற்றோர்கள் என்னை மென்மையானவள் என நினைக்கிறார்கள்.!!
ஆனால் நான் இப்பொழுதோ, முன்பை விட பலசாலி ஆகிவிட்டேன்.!!!
ஏனென்றால் இனிவரும் நாட்களில் உன் நினைவுகளின் சுமைகளையும் சுகமாக
சுமக்கவேண்டுமல்லவா.!!!!
என் நண்பர்கள் என்னை வெகுளிப்பெண் என அழைப்பார்கள்..
ஆனால் நான் இப்பொழுதோ மிகவும் விழிப்புடன் இருக்கிறேன்.!!!
ஏனென்றால் - உன் கொஞ்சும் கவி நடை தமிழையும், உன் தந்திரச்சொல்லாடல்களையும்
நயமாக உணர்ந்து் கொள்ளவேண்டுமல்லவா..!!!!
என் பேச்சை கேட்பவரெல்லாம், வித்தியாசமானதென்பர்..!!
ஆனால், இப்பொழுதோ..! உனக்கு, நீ படிக்குமளவுக்கு எழுத தேறிவிட்டேன், -
காரணம் - நீ , உனக்கு தமிழ் மிகவும் பிடித்ததாயிற்றே..!!!!!!
புத்திசாலி...
அழகு, அறிவு, பொருள்
இவையனைத்தையும் அடைவதோ
அடையப்பெற்றிருப்பதோ பெரிதில்லை
அவற்றை முறைப்படி கையாளத்தெரிந்தவந்தான்
உண்மையில் புத்திசாலி...
இவையனைத்தையும் அடைவதோ
அடையப்பெற்றிருப்பதோ பெரிதில்லை
அவற்றை முறைப்படி கையாளத்தெரிந்தவந்தான்
உண்மையில் புத்திசாலி...
ஆகஸ்ட் 15, 1997

இந்திய தாய் மண்ணே...
உனைப்பிரிந்து நாள்பொழுது, கணப்பொழுது
என கணக்கிலடங்கா நான்கு யுகங்கள் எய்திய நிலையில்
இந்திய திருநாட்டின் 50ஆம் சுதந்திரமாம் இன்று அறுதியிட்டு
உன்னிடம் நான் உரைப்பது யாதெனில், விரைவில் உன்னை
என் தமிழ் மண்ணை முத்தமிட்டு வணங்க வருகிறேன்..!! காத்திரு
எனை ஆரத்தழுவ.. என் இந்திய தாய் மண்ணே...
M. ராஜா
ஆகஸ்ட் 15, 1997
நான்கில் இவ்வுலகம்

நான்கில் இவ்வுலகம்
நான்கு திசைகள்
நான்கு பருவகாலங்கள்
நான்கு பருவ காற்றுகள்
நான்கு வாழ்க்கைப்பருவங்கள்
பிறந்த பொழுது, இளமை பொழுது,
பெற்றோராய் இருத்தல், இறக்கும் தருவாய்
இந்த நான்கு நிலைகளில் இறத்தல் நான்காம் நிலை வைத்தாலும்
மொத்த வாழ்க்கையுமே பிறப்பு முதல் இறப்பு வரை
நான்கு நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒன்று...
M. ராஜா
ஏப்ரல் 14, 1996
காதல்..
மன்னிப்பாயா?!

என்னவென்று சொல்ல.!!!
நான் உனைக்கானும் ஒவ்வொரு பொழுதும்
அடையும் மகிழ்ச்சிக்கு இல்லை கொள்ளளவு.!!!
ஆனால் - இன்றோ..!! இவ்விளவேனிர்
காலைப் பொழுதில் - என் தாமதம் - காரணம்,
நானில்லை - உனைக்காண நான் ஓடோடி கரை நோக்கி
வரும் கடலலைப் போல் வாஞ்சையோடு வந்துக்கொண்டிருந்தேன் -
வழியில் -- நாம் வாழும் நகரவாசிகளின் வாகன மெத்தனத்தால்,
வழியில் சிக்கினேன், சிதறுண்ட கண்ணாடியாய் நொறுங்கினேன் - உன்னை
காணமுடியவில்லையேயென்று..!!! - மன்றாடுகிறேன்..- மன்னிப்பாயா என்னை..!!!
கவி நிலவில் என் காலடி..
Subscribe to:
Posts (Atom)