நட்போடு நாம் வாழுவோம்..

விண்ணோடும் மண்ணோடும்
நாம் வாழும் வாழ்வில்
இன்றோடு.. நட்பாக பத்தாண்டுக் காலம்.........
மகிழ்வோடு கொண்டாடுவோம்... என்றென்றும்

நட்போடு நாம் வாழுவோம்
(விண்ணோடும்..)

வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே
நம் நட்புக்கும் என்றென்றும் பிரிவில்லையே..

(வழிகின்ற..)

காற்றுக்கு திசையில்லை தேசமில்லை
நட்பென்றும் உறவாகட்டும்..

(விண்ணோடும்)

நம் நட்பெல்லாம் உறவாகி ஊராகட்டும்
நம் தேசத்தில்.. நட்பென்னும் பூ பூக்கட்டும்..

என் அன்புமூத்த மகளே..

என் அன்புமூத்த மகளே..
எங்களின் முதல் தங்கமே
இன்று உன் பிறந்தநாள், இந்த நாளை
மட்டும்தான் நான் நம் வீட்டுக்காலண்டரில்
குறித்து வைக்காத திருநாள்॥ காரணம்

என் வாழ்வின் முதன் முறையாய் என்னுயிரை, உயிரின்
முதற்துடிப்பை தொட்டிலில் கண்முன்னே கண்ட நாள்..
நீ பிறந்த நாளன்று முதல்
வேலையாய் என்னில் அனைத்தும்
ஆராவரிக்கத்தொடங்கிய நாள்..!!

அந்த ஒரு நாளுக்காக பத்துமாதங்கூட
காத்திருக்க முடியாமல் தினந்தோறும் உன்
வருகைக்கான நாளை எண்ணிக் காத்திருந்து மகிழ்ந்தோம்..!!

நீ பிறந்தநாளன்று நீ பிறந்த மருத்துவமனையில்
நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி வந்துவிட்டதாக
ம்ருத்துவர் கூற மனமகிழ்ந்தோம்..
அழகாய் சிரிப்புடன் பிறந்த குழந்தைகளில் நீயும்
ஒரு குழந்தையென மருத்துவர்
கூற புலங்காகிதமடைந்தோம்..!!

நீ பிறக்கும்போது 3 கிலோ இருந்தாய்
பத்துமாதம் உன் அம்மாவால்
3 கிலோ அழகுதான்
சேர்க்க முடிந்ததோ என
எண்ணி என்னுள் ஆச்சர்யம்..!!!

மழைக்காலம், கார்காலம், குளிர்க்காலம்
என எந்த காலமானாலும் சரி
நீ பிறந்த காலம்தான் எங்களுக்கு
அழகான நல்லகாலம்..!!

உன் பிறந்த நாள் எப்போ? எப்போ? என
நீ மூன்று மாதமாய் கேட்டுக்கொண்டிருந்தாயே
எங்களின் கண்மனியே.. இதோ இன்றுதான்
உன் ஐந்தாவது பிறந்தநாள்... ஆனால் எங்களுக்கோ
என்றுமே நீ பிறந்தநாள்தான்..!!
என நான் சொல்லி உனக்குப்புரிய
இன்னும் சில பிறந்தநாட்களாகும்..

ஒருமுறைதான் நீ பிறந்தாய் ஆனால்
உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு
நொடிப்பொழுதும் நான்
பிறந்துக்கொண்டிருக்கிறேன்..

உன் பிறப்பு உன்
தாய்க்கு தாய்மையையும்
எனக்கு வாழ்வையும் தந்தது..

நீ பிறந்தாய் எனக்கு இரண்டாவதாய்
ஒரு முழுநிலவு தென்பட்டது..

வருடத்திற்கு 12 விடுமுறை நாட்கள்
வந்தாலும் உன் பிறந்தநாள்தான்
எனக்கான அரசு விடுமுறைநாள்..

என் மனைவிக்கு நீ பிறந்தாய்
என் தாய்க்க்குப்பின் நீயே என் தாய்..
என் அன்புமூத்த மகளே..

ஆசிரியர்..

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
கணக்கிலடங்கா மணித்துளிகளை செலவிட்டு
சிலைகளல்லா இளம் எதிர்கால சிற்பிகளை செதுக்கி
அழகுப்பார்க்கும் ஆசிரியர்

ஆட்டங்கள்தான் அருமையென எண்ணி
அழகான சிந்தனைகளை வெளிக்கொணர தெரியா
மாணவனை அழகிய வடிவில் வண்ணமயமாக்கும் ஆசிரியர்

அன்பும் கட்டுப்பாடும் ஒரு சேர நிலைத்து
இளைய சமுதாயத்தை சுடர்விட்டு எரியும்
ஒளிவிளக்காய் ஓளிக்கச் செய்யும் ஆசிரியர்

மாணவன் எங்ஙணம் முயன்றும்
முடியாமல் போகும் நிலையில் அன்பான
அரவணைப்பிலும் அழகிய செயல்களாலும்
செதுக்கிக் காட்டும் ஆசிரியர்

கடினமான மலைகளும் மென்மையான நதிகளும்
ஒருமிக்க சங்கமித்து சோலைதனை உருவாக்கும் அழகைவிட
ஆசிரியர் சில சமயம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் மென்மையான
அழகுரைகளையும் தேவையென்ற அறிவுரைகளையும் தந்து நாட்டின்
எதிர்காலத் தூணை உருவாக்கும் அற்புதத்தை - உள்ளூர முழுமையாய்
அனுபவித்தால் மட்டுமே புரிய வைக்கும் ஆசிரியர்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வேதத்தில்
மூன்றாமிடம் பிடித்திருந்தாலும் அதிக நேரம் மாணவனிடம்
நேரத்தை செலவு செய்து முதலாமிடம் பிடித்து மாணவனின்
வாழ்வை செம்மைப் படுத்தி செதுக்கும் சிற்பியாய் ஆசிரியர்..

மனித(ம்)ன்

மண்ணில் மனிதன் படைக்கப்பட்டான் இறைவனால்..
வாழ்வதற்காகவே..!! ஆனால்
மனிதனோ படைத்த இறைவனை
மறந்து..!!! மனிதத்தையும் மனிதனையும் நோகடித்தும்
சாகடித்தும் கொண்டிருக்கிறான்.!!?
இதுதான் மனிதமா.?
இவன் தான் மனிதனா.!?

மனையாழி (அ) மனைவி....

அன்பின் கூடாக அழகிய இல்லாள்
அவள் அன்புக்கும் வானமே எல்லை
எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை
அவ்வப்போது அழகாய் உணர்த்தும்
அன்பான இல்லத்தரசி..

போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற
கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்
என்ற கட்டுப்பாட்டுக்குள் விதைக்கப்பட்ட
கண்ணியமான மனைவி

தன் கணவனை முழுமையானவனாய்
இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய்
ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை
தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்

ஆண்டாண்டு காலமாய் எவருக்கும் செவிமடுக்கா
ஆடவனை ஒற்றை மந்திரச்சொல்லால்
ஒழுக்கமானவாய் மாற்றும் அன்பு படைத்த
அழகான மனையாழி..

" இடிப்பாரை இல்லா எமறா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்". என்ற குறளுக்கு
ஏற்ப நடக்கும் சில ஆடவனை வேண்டும்பொழுது
இடித்தும் சிலவேளைகளில் அரவணைத்தும் அழகாய்
இன்புற்று வாழ வழிவகுக்கும் வல்லமைப்படைத்த அரசி..
தனியாயிருந்து உனக்கு துணையாய் வந்து
இனி காலங்காலமாய் நீ எனக்கு நானுக்கு
என அமைதி கலந்து உரக்க சொல்லும்
உற்ற மனைவி..

நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு
நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என
எல்லாவற்றையும் தந்து நல்ல தாயாக
கடைசிவரை நல்ல மனையாழி..

அழகான கோடைக்காலம்..

கோடையில் குதூகலாமாய் அழகிய சந்திரோதயத்தோடு
துவங்கும் புத்தம்புது காலைப்பொழுதில் அன்புடன் மகிழ்வாய்

துள்ளித்தெரியும் குழந்தைகள் அவர்களுக்கென்றே நிதமும்
குளிர்ச்சியாய் மெல்லிசையோடு வலம் வரும் " ஐஸ் வண்டி"

நீச்சல் குள மேற்கரையில் அமைதியாய்
உறங்கும் கோடை விரும்பிகள்

சூரியன் சுட்டெரித்தாலும் சட்டை செய்யாமல் அன்றாடம்
அனைவரையும் ஒருங்கினைத்து அவல்மெல்லும் நம் தமிழினம்

அரை கிலோமீட்டராவது நடந்தே ஆகவேண்டும்
என தள்ளாடி நடக்கும் வயோதிகர்கள்..

பள்ளிக்கூடம் வாராந்திர விடுமுறையின் போதே திருவிழா நாளாக
இன்புறும் மாணவசெல்வங்களுக்கு முழுமையாய்

இரு மாதங்கள் விடுமுறை சொர்க்கமாய் காட்சியளிக்கிறது
அச்சொர்க்கத்தின் தொடர் திருவிழாவுக்கு அவன் போடும் திட்டங்கள் பல
" பள்ளியும் இல்லை - காலையில் சீக்கிரம் எழு " என்ற சத்தமும் இல்லை
இரவில் படி படி என்ற அதட்டலும் இல்லை" நிம்மதியாய் உறங்கலாம்
வேண்டிய நேரத்திற்கு வேண்டியதை செய்யலாம் " என திட்டங்கள் பல் தீட்டும் மாணவன்..!!

அவரவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை வாரந்தோறும்
விளையாடும் வாலிபர்கள்..

அடர்த்தியாய் அதனினும் அதிகமாய் பூத்துக்குலுங்கும்
செர்ரி பழங்கள் அதனை சுவைப்பதற்காகவே ஆயிரமாயிரம்
குடும்பங்கள் செர்ரி பழங்கள் நிறைந்த கிராமங்களை நோக்கி செல்லும் உல்லாச பயணங்கள்.!

" கேம்பிங்க் என்றும்.! காட்டேஜ் லைஃப் என்றும்.!
நகரவாசிகள் தன்னை கிராமங்களிலும் காடுகளிலும் அமைதியாய்
ஐக்கியப்படுத்தி "B.B.Q" என்ற முறையில் உணவுகளையே ஒரு வாரக்காலம்
குக்கிராமங்களுக்கு சென்று "குக்" பண்ணிக்கொண்டு வாழ்ந்தின்புற வருடம் முழுதும்
வகைவகையான திட்டங்கள் தீட்டும் நகரவாசிகள்".!

கோடையே நம் வாழ்க்கையின் முழுமையாகாதா என எண்ணும் பல
எண்ணங்களின் ஓசையை முழுமையாய் இரண்டு மாதங்களே அனுபவிக்கும்
ஒன்றாய் சேர்ந்து வரவேற்கும் " அழகான கோடைக்காலம்"

அன்பெனும் முழுமதி

Treat me Right
because I am worth the fight
light up my eyes and give my stomuck butterflies
smile at me and you will see me
we will be happy as we can be
give me your heart and
I promise to never want to be a part
treat me with respect and
our LOVE will be PERFECT

என் ஆங்கில எழுத்தை அருமையாய் மொழிப்பெயர்த்த குருமூர்த்தி சார்
அவர்களுக்கு என் நன்றிகள்..

அன்பெனும் முழுமதி.
******************************

உன் தோளுக்கு நான் சரியானவன்
என்றும் உனக்கு நான் நிகரானவன்

என் கண்ணில் ஒளியைக் காண
என்றும் நெஞ்சில் நிறைவைத் தேட

உன் பூஞ்சிரிப்பு ஒன்று போதும்
தோளில் பூமாலை நின்று வீழும்

உன் அன்பினைத் தருவாய் உறுதியாய்
என்றும் அன்பினைப் பெறுவாய் இறுதியாய்

முத்தம்..


முத்த வித்தகியே..!!

முத்தமென்ற வாழ்க்கையின் உன்னதமான வித்தைக்குள் நீ
என்னை புதைத்து அந்த வித்தையின்
நித்தத்தை நிதமும் எனையுணர செய்தாயடி
உன் அந்த முதல் முத்தம் நான் ரசித்து
புகைத்த ஆயிரம் சிகரெட்டுக்களை விட

அருமையான உணர்வுக்ளை என்னுள் தந்து
காலங்காலமாக கலையென கருதி நண்பர்க்ளோடு

ஊரைத்தாண்டி ஐந்து கிலோமீட்டர் சென்று "திருட்டு தம்"
அடித்த நேரங்கள் மற்ற பழக்கங்களனைத்தையும்

உன் ஒற்றை முத்தவித்தைக்குள் மறைக்க செய்த மாயமென்னடி..?!
என் முத்த வித்தகியே..!!